போஷ் சட்டம்

பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல்,தடை மற்றும் குறைதீர்ப்பு) சட்டம் 2013

    இந்த சட்டமே உச்சநீதிமன்றத்தில் விசாகா VS ராஜஸ்தான் மாநிலம் மற்றும் பலர் என்கிற ஒரு வழக்கில் உருவானதுதான். இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஒவ்வொரு மாநிலமும் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஒரு சட்டத்தை உருவாக்கவேண்டும் அதுவரை இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விசாகா கமிட்டியானது எல்லா இடங்களிலும் இருக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அதனடிப்படையில் உருவானதுதான் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல்,தடை மற்றும் குறைதீர்ப்பு) சட்டம் 2013 ஆகும்.


    கோயம்புத்தூரில் பெரும்பாலான நிறுவனங்களில் இந்த சட்டத்தின் கீழ் உள்புகார் குழுவும், உள்ளூர் புகார் குழுவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் பதவிக்காலம் 3 வருடம் ஆகும். இவைகள் தீர்ப்பாயத்திற்கு ஒப்பான சிவில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை கொண்டுள்ளது. டாக்டர் சண்முகம் அட்வகேட் போஷ் சட்டத்தின் கீழ் உள்ள குழுவின் உறுப்பினர் ஆவார். அவர் பல்வேறு வழக்குகளை வெற்றிகரமாக கையாண்டுள்ளார்.