விவாகரத்து சட்டம்

    இந்தியாவில் திருமணம் என்பது புனிதமானது. அந்த திருமண பந்தத்தில் ஏதேனும் சிக்கல்கள் வந்து அது சரிசெய்யமுடியாத கட்டத்தில் கணவன் மனைவி பிரிவது என்பது தனிப்பட்ட மன அமைதியை அவர்களுக்கு அளிக்கும். ஆனால் அதே நேரத்தில் விவாகரத்து என்கிற ஒரு விதை விதைக்கப்படும் என்றால் அது அந்த குடும்பத்தை பொறுத்த வரைக்கும் ஒரு பூகம்பமாகும். கணவன் மனைவி என்கிற இரண்டு தனிநபர்களுக்கிடையே உள்ள குடும்ப பிரச்சனையாக மட்டுமே விவாகரத்து வழக்கை பார்க்கமுடியாது. விவாகரத்து குடும்பத்தை பாதிப்பதோடு சமுதாயத்திலும் பாதிப்பை உண்டாக்குகிறது. கோயம்புத்தூரில் விவாகரத்து வழக்குகளில் அட்வகேட் டாக்டர் சண்முகம் மற்றும் அவர்களது அசோசியேட்ஸ் சிறப்பாக வழக்குகளை நடத்தி வருகிறோம்.


    விவாகரத்து வழக்கு என்பது சிவில் கிரிமினல் வழக்கு போன்று அல்லாமல் ஒரு வழக்கானது ஏழு வகையான வழக்காக பிரிந்து விடும். அதாவது விவாகரத்து என்பது ஒரு தனிவழக்கு. இதனது சட்டப்பிரிவு வேறு. ஜீவனாம்சம் என்பது ஒரு தனி வழக்கு அதனது சட்டப்பிரிவு வேறு. அவ்வாறே வன்கொடுமை வழக்கு என்றால் வேறுவிதமானது. வரதட்சனை கொடுமை என்று வரும்பொழுது அதனது சட்டமும், நீதிமன்றமும் வேறு. குழந்தை யாரிடம் வளர்வது என்று தீர்மானிப்பதற்கு தனி சட்டம், கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டு சொத்து எப்படி பிரிக்கப்படவேண்டும் என்பது குடும்ப நீதிமன்றத்தில் வேறு சட்டத்தில் வரும். சேர்ந்து வாழ வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் பிரிந்து வாழவேண்டும் என்கிற மனு அது தனி. ஆகவே விவாகத்து வழக்கில் ஜீவனாம்சத்தை தீர்மானிக்கமுடியாது. ஜீவனாம்ச வழக்கில் விவாகரத்தை தீர்மானிக்கமுடியாது.


    ஒவ்வொரு வழக்கும் அந்தந்த நீதிமன்றத்தால் அந்த மனுவில் கூறப்பட்டுள்ள பரிகாரத்தை வழக்கின் தன்மை மற்றும் சட்டத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அதனால்தான் குடும்ப வழக்குகள் என்பது குடும்ப நீதிமன்றங்களில் தனித்துவமானது என்று நாங்கள் கூறுகிறோம். விவாகரத்து மற்றும் அது சம்பந்தப்பட்ட மேற்படி வழக்குகளில் டாக்டர் சண்முகம் அவர்கள் முப்பது வருட அனுபவம் உடையவர். கோயம்புத்தூரில் ஒரு புகழ் பெற்ற விவாகரத்து வழக்கறிஞர். டாக்டர் சண்முகம் அவர்களின் படிப்பு மற்றும் அனுபவம் குடும்ப பிரச்சனைகளில் கவுன்சிலிங் கொடுப்பதற்கும், வழக்குகளை வெற்றிகரமாக கையாள்வதற்கும் உதவியாக உள்ளது.