கிரிமினல் சட்டத்தில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் இரண்டுமே ஒரு மனிதனுக்கு சுவாசம் போன்றது. இதில் மிக முக்கியமான விஷயமே பெயில் கோரும் மனுதாரருக்கு வழக்கு சாதகமாக உள்ளது என்பதால் பெயில் கொடுக்கவேண்டும் என்பதில்லை, அவ்வாறே வழக்கு சாதகமாக இல்லை என்பதால் பெயில் கொடுக்கக்கூடாது என்பதும் கிடையாது.ஜாமீன் மற்றும் முன் ஜாமீன்களில் நீதிமன்றமானது ஜாமீன்தாரர் சாட்சிகள் மற்றும் ஆவணங்களை களைப்பாரா என்பதையும் ஜாமீன்தாரரால் புகார்தாரர் உயிருக்கு எதாவது ஆபத்து ஏற்படுமா என்பதையும் ஜாமீன்தாரருக்கு எதாவது தொந்தரவு உள்ளதா என்பது போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு மட்டுமே ஜாமீன் மற்றும் முன் ஜாமீன்களில் நீதிமன்றம் முடிவு செய்கிறது. இது போன்ற ஜாமீன் மற்றும் முன்ஜாமீன்களில் கோயம்புத்தூரில் வெற்றிகரமாக பல உத்தரவுகள் கடந்த 30 வருடங்களில் பெற்றுள்ளோம்.